தமிழகத்தின் வாக்குப்பதிவை கண்டு மகிழ்ச்சி - விஷால்!

 
விஷால் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளரும், பிரபல நடிகருமான விஷால், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து சென்னைக்கு வந்து இன்று ஏப்ரல் 23 தனது வாக்கைப் பதிவு செய்தார். படப்பிடிப்புப் பணிகளுக்கு இடையே ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு, சுமார் 1000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வந்து அவர் வாக்களித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

வாக்குப்பதிவு தேர்தல்

வாக்களித்த பின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஷால், "தூரம் என்பது ஒரு பொருட்டல்ல; நமது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதே மிக முக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் இன்று காலை முதலே அனைத்து வயதினரும், குறிப்பாக இளைஞர்களும் முதியவர்களும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பதைக் கண்டு தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார். "சிறந்த வேட்பாளர் வெற்றி பெறட்டும், மே 4-ஆம் தேதி தமிழகத்திற்கு ஒரு சிறந்த மக்களின் தீர்ப்பு அறிவிக்கப்படட்டும்" என்றும் அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் கடந்த தேர்தலை விட அதிகளவில் வாக்குகள் பதிவாகி, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 6 மணிக்குப் பிறகு வரிசையில் நின்றவர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்தச் சதவீதம் 90%-ஐ நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகர் விஷால் தனது அரசியல் வருகை குறித்துப் பலமுறை பேசியிருந்த நிலையில், இன்றைய அவரது பதிவு மற்றும் வாக்களிக்கும் ஆர்வம் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.