அதிர்ச்சி... 81 செவிலியர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. கோவை மருத்துவமனையில் பதற்றம்!

 
அருணா

கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2ம் தேதி செவிலியர்களுக்கு பலருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு நிலவியது. உடனே பாதிக்கப்பட்ட செவிலியர்கள் அனைவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அருணா

இந்த பாதிப்பு குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தலைமையிலான குழுவினர், தனியார் மருத்துவமனையில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட செவிலியர்களிடம் நலம் விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு சுகாதாரத் துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் முகாம் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

அதன் பிறகு சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதில், 3 நாட்கள் நடைபெற்ற பரிசோதனை முகாமில் மொத்தம் 81 செவிலியர்கள் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். மாசுபட்ட குடிநீரால் பிரச்சினை ஏற்பட்டதாக சந்தேகிக்கிறோம். இதனால் மருத்துவமனையில் குடிநீர் வழங்கும் இடங்களில் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

அருணா

மேலும், அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. ஆய்வின் முடிவில் தான் எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிய வரும். எனினும் தற்போது குடிநீர் வழங்கும் தொட்டிகளில் இருந்த நீர் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது என கூறினர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

 

From around the web