வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இதோ சரிபார்க்கும் எளிய வழிகள்!

 
வரைவு வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியல்


தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இணையதளம் வாயிலாகவும், கைபேசி செயலி மூலமாகவும் மிக எளிதாக வீட்டிலிருந்தபடியே இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியும். இதற்காகத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in என்ற முகவரிக்குச் சென்று, உங்களின் அடையாள அட்டை எண்ணைப் பதிவிட்டுப் பெயர் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

இணைய வசதி இல்லாதவர்கள் தங்களின் கைபேசி மூலம் 1950 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம். மேலும், 'Voter Helpline' என்ற செயலியினைப் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களின் பெயர், தந்தை பெயர் அல்லது அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டும் சரிபார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஒருவரால் வாக்குச்சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் பட்டியல்

ஒருவேளை வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால், அதனைச் சேர்க்கும் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது அந்தந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரில் வழங்கியோ புதிய பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்பதால், கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க வாக்காளர்கள் இப்போதே தங்கள் பெயர் நிலவரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.