3 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடக்கம் - இளைஞர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

 
பிரதமர் மோடி பிரதமர் மோடி

அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் குடிமக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் கோரிக்கையையும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. முன்னதாகக் காலை 6 மணியளவில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

வாக்குப்பதிவு நடைபெற்று வரும் மாநிலங்களை மையப்படுத்தி பிரதமர் மோடி, "புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்த இளைஞர்களும், பெண் வாக்காளர்களும் பெருந்திரளாக வந்து வாக்களிக்க வேண்டும்."

"2026 அசாம் சட்டசபை தேர்தலை ஜனநாயகம் மற்றும் பொதுக் கடமையின் கொண்டாட்டமாக மாற்றுங்கள். மாநிலத்தின் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என நம்புகிறேன்."

புதுச்சேரி

"சாதனை அளவிலான வாக்குப்பதிவு கேரளாவின் ஜனநாயக உணர்விற்குப் புத்துணர்ச்சி அளிக்கும். இளைய தலைமுறையினர் முன்வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்."

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பாகவே வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில், காலை முதலே முதியவர்கள் முதல் முதல்முறை வாக்காளர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் ஆணையம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வசதிகளைச் செய்துள்ளது.