பிரேமானந்த மகாராஜ் சீடர் திடீர் மரணம்! பிறப்புறுப்பு துண்டித்த நிலையில் சடலமாக மீட்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் பிரேமானந்த மகாராஜின் சீடரான 26 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேமானந்த மகாராஜின் சீடராக இருந்த ரசிக் துலாரி சரண், பிருந்தாவனத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தங்கியிருந்த அறையில் சந்தேகத்திற்கிடமான சில தடயங்கள் மற்றும் ஒரு கருவி கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவர் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அறையில் கிடைத்த பொருட்கள் மற்றும் சம்பவத்துக்கு முன்பு அவரது நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், அவரது மரணத்துக்கான முழுமையான காரணத்தை கண்டறிய பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். இதுவரை அவரது மரணம் தொடர்பாக எந்த ஒரு காரணமும் உறுதி செய்யப்படவில்லை.சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கட்டிடத்தில் உள்ளவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே இளைஞரின் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.
