வி.எஸ்.பாபு மறைவு ஒட்டுமொத்த வட சென்னைக்கும் இழப்பு... ஆதவ் அர்ஜுனா நெகிழ்ச்சி!
Nov 19, 2026, 16:15 IST
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (நவ.19) காலமானார். அவரது மறைவு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.அப்போது பேசிய அவர், “எப்பொழுதும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர் வி.எஸ்.பாபு” என புகழாரம் சூட்டினார்.

மேலும், வட சென்னை மக்களுக்காக தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் வி.எஸ்.பாபு என்றும், அவரது மறைவு ஒட்டுமொத்த வட சென்னைக்கும் ஏற்பட்ட பெரும் இழப்பு என்றும் வேதனை தெரிவித்தார்.
