கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார் ... இபிஎஸ் இரங்கல்!

 
இபிஎஸ்

 

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் வி.எஸ்.பாபு

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வி.எஸ்.பாபு மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவர் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொளத்தூர்

மேலும், வி.எஸ்.பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.