அண்ணனுக்காக நியாயம் கேட்கச் சென்ற தம்பி கொடூரக் கொலை.. 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

 
சென்னை

 

சென்னை வியாசர்பாடியில் அண்ணனைத் தாக்கியவர்களிடம் தட்டிக்கேட்கச் சென்ற தம்பி, மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

வியாசர்பாடி பகுதியில் ஒருவரைச் சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தனது அண்ணனைத் தாக்கியவர்களிடம் நியாயம் கேட்பதற்காக அவரது தம்பி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் அவரை நடுரோட்டில் விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்தக் கொலைச் சம்பவத்தில் தந்தை மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 6 பேருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, அவர்களைப் பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகளை அமைத்துள்ள போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.இந்தச் சம்பவத்தின் பின்னணி, முன்விரோதம் உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.