போர் பதற்றம்.. இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை - தேர்தல் மாநிலங்களுக்கு விலக்கு!

 
மோடி மோடி

இஸ்ரேல் - ஈரான் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி இன்று மாலை காணொலிக் காட்சி வாயிலாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, அந்தந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவசரகாலத் திட்டங்கள் குறித்துப் பிரதமர் ஆய்வு செய்வார். போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதி பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.  போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசுகள் ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மோடி

யார் பங்கேற்பார்கள்?

பெரும்பாலான மாநிலங்களின் முதல்-மந்திரிகள் இந்த நேரடி காணொலி விவாதத்தில் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, இந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்க மாட்டார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களின் சார்பில் அந்தந்த மாநிலத் தலைமைச் செயலாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

மோடி ட்ரம்ப்

ஏற்கனவே 800 கி.மீ தூரம் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், பிரதமரின் இந்த அவசர ஆலோசனை தேசிய அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.