தொடர் மின்வெட்டு.. கடுப்பான வார்டு உறுப்பினர் நூதன போராட்டம்.. பதறிய மின்வாரிய ஊழியர்கள்..!!

 
வார்டு உறுப்பினர் சி.ரஞ்சித்

தொடர் மின்வெட்டை கண்டித்து வார்டு உறுப்பினர் நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம்,  பத்தனாபுரம்,  தாளவூர் கிராம பஞ்சாயத்திலுள்ள 2 அல்லது 3-வது வார்டுகளில் ஒரு நாளைக்கு 20 முறை மின் தடை ஏற்படுவதால் இது குறித்து பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் கொடுத்தும் பலனில்லாத்தால்  வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தில் இறங்கினார்.இதற்காக பஞ்சாயத்து வார்டு உறுப்பினரான சி.ரஞ்சித் அவரின் வீட்டின் மின் கட்டணம் உட்பட 9 மின் இணைப்பின் கட்டணத்தை நாணயங்களாக மாற்றி சாக்கு மூட்டையில் கட்டி மின் ஊழியரிடம் நாணயங்களை கொடுத்துள்ளார்.

Paying' for power outages with coins, ward member in Kerala keeps officials  busy - The Hindu

9 இணைப்பிற்கான மின்கட்டணமான ரூ.9,737 கொடுத்துள்ளார். மேலும்,  இதில் எவ்வளவு நாணயங்கள் உள்ளது என கூறாமல் எண்ணி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.  தலா ஒன்று,  இரண்டு,  ஐந்து மற்றும் பத்து ரூபாய் நாணயங்களை எண்ணுவதற்கு ஊழியர்களுக்கு நீண்ட நேரம் ஆனது.  இதில் மின் அலுவலகத்திலிருந்த அனைத்து ஊழியர்களும் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  

இதன் பின்னும் மின்தடை தொடர்ந்தால் அடுத்த முறை வார்டில் உள்ள பெரும்பாலான பயனாளிகளுக்கு கட்டணத்தை செலுத்த,  இதுபோன்ற நாணயங்களுடன் வருவோம் என, வார்டு உறுப்பினர் எச்சரித்தார். அதனை தொடர்ந்து,  யாரையும் தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்வதற்காக அல்ல,  ஆனால் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் மின்சார வாரியத்திற்கு இது நினைவூட்டுவதாக என ரஞ்சித் கூறினார்.

From around the web