அமெரிக்காவில் சில்லென வரவேற்பு.... விரைவில் ட்ரம்புடன் சந்திப்பு... மோடி பதிவு!

 
மோடி


இந்திய பிரதமர் மோடி  கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டு  சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். பிரான்ஸ் சுற்றுப்பயணத்தில்  பாரிஸில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் அந்த மாநாட்டை தலைமை தாங்கி உரையாற்றினார்.  இதனை தொடர்ந்து இன்று அதிகாலை அமெரிக்கா வாஷிங்டன் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் குளிர் பனிப்பொழிவையும் தாண்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அதன் பிறகு வாஷிங்டன் வெள்ளை மாளிகை அமெரிக்க புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி துளசி  காபர்ட்-ஐ பிரதமர் மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடினர்.அமெரிக்காவில் உள்ள  பிரதமர் மோடி ” சற்று முன் வாஷிங்டன் டிசியில் விமானம் தரையிறங்கியது. அமெரிக்க அதிபர்  டிரம்ப் உடனான சந்திப்பை எதிர்நோக்குகிறோம். இந்தியா – அமெரிக்கா விரிவான உலகளாவிய  கூட்டாண்மையை உருவாக்குதல். இரு நாட்டு மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் நமது நாடுகள் இணைந்து உழைக்கும் ” என பதிவிட்டுள்ளார்.


அத்துடன் தனக்கு வரவேற்பு அளித்த  அமெரிக்க வாழ் இந்தியர்கள் குறித்து  பிரதமர் மோடி ”  குளிர் நேரத்தில் ஒரு சூடான வரவேற்பு! கடும் பனிப்பொழிவு காலநிலையையும் பொருட்படுத்தாமல், வாஷிங்டன் டிசியில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் என்னை உற்சாகத்துடன் சிறப்பாக வரவேற்றுள்ளனர். அவர்களுக்கு என் நன்றிகள்.” என பதிவிட்டுள்ளார்.


அமெரிக்கா நாட்டின் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி துளசி காபர்ட் உடனான சந்திப்பு குறித்து, ” அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்ட்-ஐ  வாஷிங்டன் DC இல் (வெள்ளை மாளிகை) சந்தித்தோம்.  அமெரிக்காவின் புலனாய்வுத்துறை உயர் பொறுப்பில் பணியமர்த்தப்பட்டதற்கு அவர்களை வாழ்த்தினேன். இந்தியா – அமெரிக்கா நட்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தோம். இரு நாட்டு உறவில் எப்போதும் வலுவான பங்களிப்பாளராக இருந்தார்.” என பதிவிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!