கடற்கரை செல்வோர்களுக்கு எச்சரிக்கை.. கூழாங்கல்லை எடுத்து சென்றால் ரூ.2 லட்சம் அபராதம்.. எங்கு தெரியுமா?

 
லான்சரோட் கடற்கரை

உலகம் முழுவதும் பல கடற்கரைகள் உள்ளன. பொதுவாக பணக்காரர்களுக்கு கடற்கரைகள் மிகவும் பிடித்தமான இடமாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக கடற்கரைக்குச் செல்கிறார்கள், பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, மன அமைதி மற்றும் தனிமைக்காகவும். அங்கு செல்லும் பொதுமக்களில் சிலர் கடற்கரையில் கிடக்கும் கடற்பொருள்கள் அல்லது கூழாங்கற்களை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் ஒரே ஒரு கடற்கரையில் கூழாங்கற்களை கொண்டு சென்றால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.


கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுர்டெவென்ச்சுரா கடற்கரைகளில் அபராதம் விதிக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொலைதூர நாடுகளில் இருந்து வரும் சில சுற்றுலாப் பயணிகள் இந்த கடற்கரைகளில் இருந்து மணல் கூழாங்கல்களை மட்டுமே எடுக்க முனைகின்றனர்.

இதனால் தீவுப்பகுதியில் கூழாங்கற்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீவின் அழகு பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலா பயணிகளின் இந்த செயற்பாடு தீவின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லான்சரோட்டின் கடற்கரைகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஒரு டன் கற்களை எடுத்துச் செல்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சுற்றுலா பயணிகளிடம் இருந்து பலமுறை மணல், கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அபராதம் விதிக்கப்படவில்லை.

இந்நிலையில், முதல் முறையாக இந்த அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது கடற்கரையில் இருந்து கற்கள் மற்றும் மணல் எடுக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.13,478 முதல் ரூ.2.69 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web