மக்களை திசை திருப்பினால் பெரிய விளைவை சந்திப்பீங்க... அமைச்சர் ஜெயக்குமார் சீமானுக்கு எச்சரிக்கை !

 
சீமான் ஜெயக்குமார்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சீமான் பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசி வருகிறார்.  சீமானின் இந்த கருத்துக்கு  திமுகவினர் மட்டுமல்லாமல் மற்ற கட்சியை சேர்ந்த அரசியல் பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சீமான் ஜெயக்குமார்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த தலைவர் புகழுக்கு எந்த வகையிலும் அவப்பெயர் ஏற்படுத்துவது என்பது பயனற்ற செயல்.பெரியாரைத் தொடர்ந்து இழிவு படுத்துவதை ஒருபோதும் அதிமுக அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சீமான்

பெரியார் குறித்து  சீமான் பேசிக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை தொடர்ந்து பேசினால் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார். இன்று இந்தியாவில்  விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரம் என எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது அதைப் பற்றி பேசாமல் பெரியார் குறித்து சீமான் பேசுவது மக்களை திசை திருப்பும் செயலாக இருந்து வருகிறது.  பெரியார் சொல்லாததை எல்லாம் சொல்லியதாக கூறி மக்களை திசை திருப்பக் கூடிய அவசியம் சீமானுக்கு ஏன் வந்தது என ஜெயக்குமார் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web