விசிக மாநாட்டு நெரிசல் சதித்திட்டமா? - விசாரணைக்கு ஆணையம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் திடீரென ஏற்பட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசலை மையமாகக் கொண்டு, கட்சித் தலைவர் திருமாவளவனை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த அல்லது கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என விசிக தரப்பில் அதிகாரப்பூர்வமாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, கட்சித் தலைவர் திருமாவளவனுக்குத் துப்பாக்கி ஏந்திய சிறப்புப் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஆணையம், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, வரும் அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் தங்களது முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
