வாஷிங்டன் விமான நிலையத்தில் பரபரப்பு... ஒன்றோடு ஒன்று உரசிய 2 விமானங்கள்... வைரல் வீடியோ!
அமெரிக்காவின் வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் புறப்படுவதற்காக ஓடுபாதை அருகே வரிசையில் நின்ற இரண்டு விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டல்லாஸ்-போர்ட் வொர்த் நோக்கிச் செல்லவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை, சிகாகோ ஓஹேர் நோக்கிச் செல்லவிருந்த மற்றொரு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை நுனியில் மோதியது.
இதில் ஒரு விமானத்தின் இறக்கை நுனி உடைந்து விழுந்ததால் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு விமானங்களிலும் மொத்தம் 344 பயணிகள் இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து இரு விமானங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
