வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கழிவு... குற்றவாளி இவங்க தான்!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
அந்த வகையில் முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் எண்ணத்தில் அந்த குற்றம் அரங்கேறியிருப்பதாக தெரிகிறது.
இது குறித்து முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன், சுதர்சன் இருவரும் குற்றச்செயலில் ஈடுபட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளி ராஜா இவர்களுக்கு எதிராக ஜனவரி 20ம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!