சூப்பர்... மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்ற தடை.. அதிரடி உத்தரவு!!

 
கழிவுநீரை அகற்றும் தொழிலாளர்கள்
கழிவுநீரை சுத்தம் செய்யும் போது, அகற்றும் பணியின் போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு குறைந்து ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை, மறுவாழ்வுக்கான சட்டம் (Manual Scavengers Deaths Prevention Act) கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறையினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

 Rs 30 lakh compensation if worker dies while cleaning sewage, Supreme Court order to Govt

இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கழிவு நீரை சுத்தம் செய்யும் போது, அகற்றும் பணியின் போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு குறைந்து ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவிடப்பட்டது.

 Rs 30 lakh compensation if worker dies while cleaning sewage, Supreme Court order to Govt

இதேபோல் கழிவு நீர் அகற்றும் பணியின் போது படுகாயமடைந்தாலோ அல்லது நிரந்தர உடல் பாதிப்பு அடைந்தாலோ ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறையை முற்றிலுமாக ஒழித்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

From around the web