“மகள் சாவுறதைப் பாருங்க...” மனைவியை தூக்கில் தொங்கவிட்டு, மாமியாருக்கு வீடியோ காலில் காட்டிய கணவன்!
கர்நாடக மாநிலத்தில் கணவன் ஒருவன் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அதனை அவரது பெற்றோருக்கு வீடியோ காலில் காட்டி, உங்கப் பொண்ணு சாவுறதைப் பாருங்க’ என்று கொடூரமாக நடந்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பிலகி தாலுகாவில் இக்கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாக்யஸ்ரீ (23) என்ற பெண் மீது அவரது கணவரான பிரவீன் என்பவருக்குத் தொடர்ச்சியாகச் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்தச் சந்தேகத்தின் காரணமாக, ஆத்திரமடைந்த பிரவீன் மனைவியை முதலில் மரக்கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குப் பிறகு, மனைவியைப் பரிதாபமாகத் தூக்கிலிட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தான் செய்த இக்கொடூரச் செயலைத் தனது செல்போனில் பிரவீன் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு வீடியோ கால் செய்து, தூக்கில் தொங்கும் அவர்களின் மகளின் உடலையும், தூக்கில் மாட்டப்பட்ட நிலையில், துடிதுடித்து உயிரிழக்கும் கொடூரச் சம்பவத்தையும் லைவ்வாக காட்டியுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பிலகி காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த பிரவீனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், பாக்யஸ்ரீயின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இக்கொலை வழக்கில் பல்வேறு கோணங்களில் தீவிர விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
