ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

 
ஈரோடு பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாகப் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 692 கனஅடியில் இருந்து 827 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 60.96 அடியாக உள்ளது.

அணையில் தற்போது 7.56 டி.எம்.சி. அளவுக்குத் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து விநாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணை

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்மட்ட நிலவரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.