மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்குப் பிறகு உயர்வு - 80 அடியைக் கடந்தது!

 
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிவு!!..

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 3 மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உயர்ந்து, 80 அடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 80.31 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,833 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை

டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கன அடி நீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் 80 அடியைத் தாண்டித் தொடர்ந்து அதிகரித்து வருவது டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.