91 அடியைக் கடந்தது மேட்டூர் அணை நீர்மட்டம் - நாளை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!
Aug 31, 2026, 21:00 IST
தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்தின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91 அடியைக் தாண்டி உயர்ந்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91 அடியைத் தாண்டியுள்ளதுடன், அணையில் 53.97 டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.

அணைக்கு வந்துசேரும் நீர்வரத்து வினாடிக்கு 10,485 கன அடியில் இருந்து தற்போது 11,501 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் விரைவில் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
