மேட்டூர் அணையில் நீர் திறப்பு 10,000 கனஅடியாகக் குறைப்பு - விவசாயிகள் கவலை!

 
மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நீர் தேவைக் குறைவு மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கடந்த சில நாட்களாகத் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாகக் குறைப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் திறப்பு

தற்போது அணைக்கு வந்துசேரும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடிக்கும் கீழாகக் சரிந்துள்ளது காவிரி டெல்டா விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (அக். 11) மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.