சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்... கையிருப்பு வெச்சுக்கோங்க மக்களே!
Sep 22, 2024, 11:10 IST
சென்னையில் இந்த பகுதிகளில் எல்லாம் 3 நாட்களுக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையின் பல இடங்களிலும் மெட்ரோ ரயில் நிலைய பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அடையாறு, தேனாம்பேட்டை பகுதிகளில் குடிநீர் விநியோகம் 3 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை மறுதினம் செப்டம்பர் 24ம் தேதி காலை 9 மணி முதல் செப்டம்பர் 26ம் தேதி அதிகாலை 4 மணி வரை மந்தைவெளி ராமகிருஷ்ண மடம் சாலையில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால், தேனாம்பேட்டை மற்றும் அடையாறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்த 3 நாட்களுக்கு தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும் என குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த குடிநீர் விநியோகம் நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடலாம். அவசரத் தேவைக்கு குடிநீர் லாரிகள் மூலம் வழங்கப்படும். இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு குடிநீர் வாரியத்தின் தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!
From
around the
web