"நம்மளே நாலு சீட் ஜெயிக்க அதிமுக - பாஜக கிட்ட கதை ஓட்டுறோம்" - அன்புமணியை கலாய்த்த மாணிக்கம் தாகூர்!

 
தாகூர் அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் கட்சியைக் விமர்சித்துப் பேசியதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வீடியோ பதிவின் மூலம் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் குறித்துப் பேசுவதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. அவர் முதலில் தனது சொந்தக் கட்சியின் வேலையைப் பார்ப்பது நல்லது. "அண்ணே ஏன் இந்த பதற்றம்? நம்மளே 4 எம்.எல்.ஏ ஜெயிக்குறதுக்கு அதிமுக - பாஜக கிட்ட கதை ஓட்டிட்டு இருக்கோம்.. நீங்க காங்கிரஸ் பத்தி பேசலாமா? முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க Mr.அன்புமணி" என நேரடியாகச் சாடியுள்ளார்.

அன்புமணி

மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழக அரசிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை எனப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கூறுகிறது. இந்தக் கேள்விக்கு அன்புமணியால் பதில் கூற முடியுமா? அல்லது மத்திய அரசைக் கண்டித்து அவரால் பேசத்தான் முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரைப் பேசவிடாமல் பாஜகவினர் திட்டமிட்டுத் தடுக்கின்றனர். நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றப் பக்கமே வருவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாகத் தன் கடமையைச் செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.