நாங்கள் தப்பிக்க வேலியின் கீழ் ஊர்ந்து சென்றோம்... தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

 
 நாங்கள் தப்பிக்க வேலியின் கீழ் ஊர்ந்து சென்றோம்... தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில்  தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச் சேர்ந்த ஆரத்தி மேனன், ”காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” என உருக்கமாக பேசியுள்ளார்.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேரில், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளில் அவரது தந்தை 65 வயதான என். ராமச்சந்திரனும் ஒருவர். கொச்சியின் எடப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் உடல் நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு  கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், நேற்றிரவு ஆரத்தி மேனன், “முதலில் அது பட்டாசு வெடிக்கும் என்று நாங்கள் நினைத்தோம்… ஆனால் அடுத்த சத்தம் கேட்டதும் இது துப்பாக்கி சூடு என்பதை உணர்ந்தோம். எனது தாயார் ஷீலா, காரில் தங்கியிருந்தார். “நாங்கள் தப்பிக்க வேலியின் கீழ் ஊர்ந்து சென்றோம்.
மக்கள் எல்லா திசைகளிலும் தெறித்து ஓடத் தொடங்கினர். நாங்கள் நகர்ந்து கொண்டிருந்தபோது, ​​திடீரென பயங்கரவாத தாக்குதலில் கண்முன்னேயே என் தந்தையை இழந்த நான், என் இரட்டை குழந்தைகளை காப்பாற்ற நினைத்து அங்கிருந்து தப்பி ஓடிவந்தேன். அப்போது உள்ளூர்வாசியான முசாஃபிர் என்ற ஓட்டுநர்தான் எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றார்.
முசாஃபிரும், மற்றொரு உள்ளூர் ஓட்டுநர் சமீரும்தான் மறுநாள் அதிகாலை 3 மணிவரை என் அப்பாவின் சடலம் இருந்த பிணவறையின் வெளியே நின்று, அவர்களின் தங்கையை போல் என்னை பாதுகாத்து, எல்லாவற்றிலும் உறுதுணையாக இருந்தனர். காஷ்மீர் எனக்கு இரண்டு சகோதரர்களை கொடுத்துள்ளது” என உருக்கமாக கூறியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!