“எங்களுக்கும் கார் வேண்டாம்” - திமுகவைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட், பாமக எம்.எல்.ஏ-க்களும் எதிர்ப்பு!

 
உதயநிதி நிர்மல் உதய்நிர்மல்

தவெக அரசு சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், திமுகவைத் தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்குக் கார் வேண்டாம் என அறிவித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "திமுக உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் கார் தேவையில்லை; வசதி இல்லாத மற்ற உறுப்பினர்களுக்குக் கொடுத்துக் கொள்ளுங்கள்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

உதயநிதி சட்டப்பேரவை

திமுகவின் இந்த முடிவை ஆதரிக்கும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் பாமக உறுப்பினர்களும் தங்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

தவெக அரசின் கார் வழங்கும் திட்டத்திற்கு அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இத்திட்டம் குறித்து சட்டமன்ற அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.