உல்லாசமாக இருந்தோம்... நர்ஸ் வழக்கில் குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம்!
ராமநாதபுரத்தைச் சேர்ந்த செவிலியர் உத்ரா கொலை வழக்கில், அவருடன் பணியாற்றிய மருத்துவமனை ஊழியர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் வெளியாகி உள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் மனைவி உத்ரா (26). இவர் திருப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே மருத்துவமனையில் பணியாற்றிய சரவணன் (23) என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியன்று சரவணன் உத்ராவைத் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, உத்ரா அணிந்திருந்த நகைகளைக் குறிவைத்துச் சரவணன் இக்கொலைத் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். உல்லாசமாக இருந்ததைத் தொடர்ந்து, அவரிடமிருந்த நகைகளைப் பறிப்பதற்காக உத்ராவைக் கொடூரமாகக் கொலை செய்ததாகச் சரவணன் விசாரணையின்போது ஒப்புக் கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
