"சிறுமிகளைச் சீரழித்தவனை உள்ளே தூக்கி வைத்து விட்டோம்" - மதுராந்தகம் பிரசாரத்தில் முதலமைச்சர் விஜய் ஆவேசம்!

 
வீரமணி

மதுராந்தகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளையும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய முதலமைச்சர் விஜய், சிறுமிகளைத் தொடர்ந்து சீரழித்து வந்த கொடூரக் குற்றவாளியைத் தங்களது அரசு ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

கிரானைட் வீரமணி

இந்த விவகாரம் தொடர்பாகக் கடுமையான கேள்விகளை எழுப்பிய அவர், "மு.க.ஸ்டாலின் சார், இதில் ஆவது உங்கள் வாயைத் திறவுங்கள்; இதிலும் கூடவா கூட்டு வைப்பீர்கள்?" என்று வினவினார். திமுக தரப்பில் இருந்து உரிய பதிலோ கண்டனமோ வரவில்லை என்றால், மற்றவர்களும் அவர்களைப் போன்றேதான் இருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

பொதுவாழ்வில் தனது சொந்தத் தாயைப் பற்றி அவதூறாகப் பேசிய போது கூடப் பொறுமை காத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் இனி பெண்களுக்கெதிரான குற்றங்கள் மற்றும் பொதுநலப் பிரச்சினைகளில் அதுபோன்று அமைதியாக இருக்க முடியாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.