நாம் தமிழர் பெண் நிர்வாகி மகளை கொலை செய்து தற்கொலை... !

 
கொலை


சென்னை புளியந்தோப்பு பட்டாளம் பகுதியில்  வசித்து வருபவர்   காயத்ரி.   நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பணிபுரிந்து வரும் இவர்  வர்மக் கலைஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு 14 வயதில்மைத்ரா  என்ற மகள் உண்டு.  இந்நிலையில்,   2012ல்  காயத்ரிக்கும் அவரது கணவர் சிவகுமாருக்கும்   கருத்து வேறுபாடு  காரணமாக விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து  காயத்ரி தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.‌ அத்துடன் துணி, தேங்காய் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலும் செய்து வந்தார்.
   கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரிக்கு புரசைவாக்கம் தக்கர் தெருவில் வசித்து வரும்  முகமது அப்ரானுடன்  பழக்கம் ஏற்பட்டது.

விஷம்

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.  2020ல்  அப்ரான் வந்தவாசியைச் சேர்ந்த வேறொரு  பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வில்லிவாக்கம் பகுதியில் வீடு வாடகை எடுத்து குடித்தனம் நடத்தி வந்தார்.இது குறித்து காயத்ரி  கணவன் அப்ரான் மற்றும் அவரது பெற்றோரிடம்  முறையிட்டுள்ளார். ஆனால், அப்ரானின் பெற்றோர் கண்டுகொள்ளவே இல்லை.   இதனால் அப்ரானுக்கும், காயத்ரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.  இந்நிலையில், நேற்று இரவு தனது மகள் மைத்ராவுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து விட்டு பின்னர் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

சீமான்
 காயத்ரியின் சகோதரி நிர்மலா தேவி அவரை நேற்று இரவு செல்போனில் தொடர்பு கொண்ட போது போன் எடுக்கப்படவே இல்லை. வீடு பூட்டப்பட்டு இருந்தது.  சந்தேகத்தில் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தார்.  . இதன் பேரில் அங்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மைத்ரா வாயில் நுரைத்தள்ளி இறந்த நிலையிலும், காயத்ரி தூக்கிட்டு இறந்த நிலையிலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இருவரது உடல்களும் மீட்கப்பட்டு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து காதல் கணவர் முகமது அப்ரான் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மகளைக் கொலை செய்து விட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகியான அவரது தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web