"தவெக அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்த ரூ.6 லட்சம் கோடி தேவை" - தங்கம் தென்னரசு எச்சரிக்கை!

 
தங்கம் தென்னரசு தங்கம் தென்னரசு

தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை மற்றும் கடன் சுமை குறித்துத் தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை உலகளாவிய விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துத் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தவெக அரசு அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு மட்டும் சுமார் ரூ. 6 லட்சம் கோடி கூடுதல் நிதி தேவைப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் மரிய வில்சன் நிதியமைச்சர்

செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, மாநிலத்தின் தற்போதைய நிலையான வருவாய் ஆதாரங்கள் , நிதி மேலாண்மை உத்திகள் மற்றும் திட்டங்களின் நீண்டகாலச் செயல்திறன் ஆகியவற்றைச் சற்றும் கருத்தில் கொள்ளாமல், தேர்தலுக்காக அள்ளி வீசப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இவை. இவற்றைச் செயல்படுத்த முயன்றால் அது மாநிலத்தின் நிதிச் சமநிலையைப் பெரும் சுமைக்குள்ளாக்கும்.

ஏற்கனவே வட்டிச் சுமை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் அதிகரித்து வருவதாகக் கூறும் தவெக அரசு, இந்த ரூ.6 லட்சம் கோடி கூடுதல் நிதித் தேவைக்கு எங்குச் செல்லப் போகிறது? புதிய வருவாய் ஈட்டும் வழிகளை உருவாக்காமல் இத்தகைய இமாலயத் திட்டங்களைச் செயல்படுத்துவது சாத்தியமற்றது.

தங்கம் தென்னரசு

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தொலைநோக்குத் திட்டங்களையும், தற்போதைய தவெக அரசின் புதிய வாக்குறுதிகளையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், வெறும் வெற்றுப் புள்ளிவிவரங்களை வெள்ளை அறிக்கையாகக் காட்டிவிட்டுத் தவெக அரசு தங்களது பிரம்மாண்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பித்துவிட முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.