“அவனையே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்ன்னு சொன்னோமே..” கதறிய பெற்றோர்... நித்யாவைக் காதலனே கொன்று எரித்தது அம்பலம்!

 
நித்யா காதல் கொலை இளம்பெண்

கேரள மாநிலம் இடுக்கியில் பம்பிலா அணை அருகே படுகொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட, தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த 18 வயதுப் பெண் நித்யா கொலை வழக்கு தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக அவரது காதலனான வட்டப்பாராவைச் சேர்ந்த நிஷாந்த் (19) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நித்யாவும் நிஷாந்தும் நீண்ட காலமாக காதலித்து, உறவில் இருந்ததாகவும், இதற்கு முன்பு ஒருமுறை நித்யா அவருடன் வீட்டை விட்டு ஓடிப் போயிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவள் சிறுமியாக இருந்ததால் குடும்பத்தினர் அவளை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். 

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், “நித்யாவும் நிஷாந்தும் நீண்ட காலமாக நெருக்கமாக இருந்தனர். ஆனால் அப்போது அவளுக்குப் பருவ வயது ஆகவில்லை. அவளுக்கு 18 வயது ஆனதும் நாங்களே திருமணம் செய்து வைப்போம் என்றும், அவள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டும் போதும் என்றும் கூறித்தான் நாங்கள் அவளைத் திரும்ப அழைத்து வந்தோம்” என்று கண்ணீருடன் தெரிவித்தனர். மேலும் நித்யா காணாமல் போன 4 நாட்களுக்குப் பிறகு தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில் நிஷாந்த் அளித்த வாக்குமூலம் குறித்துத் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 11-ம் தேதியன்று நித்யாவைப் பூப்பாரா பகுதிக்கு அழைத்துச் சென்ற நிஷாந்த், தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே ஆட்டோவில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த நிஷாந்த் நித்யாவின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். 

பள்ளி மானவி தற்கொலை

அவள் இறந்துவிட்டதை உறுதி செய்வதற்காக அவளது முகத்தில் கல்லால் தாக்கியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் உடலை ஆட்டோவிலேயே மறைத்து எடுத்துச் சென்று, பம்பிலா அணைக்கு அருகிலுள்ள பகுதிக்கு அருகில் வைத்து ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்துடன் பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.