“தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கவே ஆதரிக்கிறோம்; தொகுதி மறுவரையறையில் திமுக கேட்டது கிடைத்துள்ளது” - தங்கம் தென்னரசு விளக்கம்!

 
தங்கம் தென்னரசு

தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுக முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதால், மசோதாவை ஆதரிப்பதாகத் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் உரிமையைக் காப்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, "தொகுதி மறுவரையறையில் திமுக கேட்டது கிடைத்துள்ளது. திமுக முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதால், இம்மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

தங்கம் தென்னரசு

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மசோதாவை நிறைவேற்றினால், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி.) எண்ணிக்கை குறையும். ஆனால், தி.மு.க. கேட்டதை மத்திய அரசு தந்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

"தமிழ்நாட்டின் உரிமையைக் காக்க இந்த முடிவை எடுக்காவிட்டால், அது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" எனச் சுட்டிக்காட்டிய தங்கம் தென்னரசு, மாநிலத்தின் நலனைப் பாதுகாக்கும் நோக்கிலேயே திமுக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெளிவுபடுத்தினார்.