"மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்...” - கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ராகுல்காந்தி!
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ள மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு என்பது நமது அரசியலமைப்பின் ஒரு பகுதி என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை காங்கிரஸ் கட்சி நிபந்தனையின்றி ஆதரிப்பதாகத் தெரிவித்தார். பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது காலத்தின் கட்டாயம் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது.
அதே நேரத்தில், மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதைத் தொகுதி மறுவரையறையுடன் (Delimitation) இணைப்பதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மத்திய அரசு தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இந்த மாற்றங்களைச் செய்வது ஓபிசி (OBC), எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) பிரிவினரின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதில் 280 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இந்த நடைமுறை 2029 மக்களவைத் தேர்தலின் போது அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம் வீதியில் இறங்கிப் போராடும் நிலையில், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
"மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம், ஆனால் தொகுதி மறுவரையறையை எதிர்ப்போம்": ராகுல் காந்தி அதிரடி விளக்கம்!
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ள மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு என்பது நமது அரசியலமைப்பின் ஒரு பகுதி என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை காங்கிரஸ் கட்சி நிபந்தனையின்றி ஆதரிப்பதாகத் தெரிவித்தார். பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது காலத்தின் கட்டாயம் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது.

அதே நேரத்தில், மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதைத் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மத்திய அரசு தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இந்த மாற்றங்களைச் செய்வது ஓபிசி (OBC), எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) பிரிவினரின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.