என்றென்றும் துணையாக இருப்போம்.. இஸ்ரேலுடன் கைகோர்க்கும் பிரான்ஸ்..!

 
இஸ்ரேல்-பிரான்ஸ்
இஸ்ரேலுடன் பிரான்ஸ் என்றும் துணையாக நிற்கும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசியுள்ளார். இஸ்ரேலுக்கு பிரான்ஸ் என்றும் உறுதுணையாக இருக்கும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.

Israel | French President Emmanuel Macron says France stands 'shoulder to  shoulder' with Israel - Telegraph India

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் இருபுறமும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காசா மருத்துவமனை மீதான தாக்குதல், மேலும் அப்பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான இஸ்ரேல் விதித்த தடை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

French President Macron arrives in Tel Aviv amid war - NewsBharati

இதன் காரணமாக உலக தலைவர்கள் இஸ்ரேலிடம், காசா மக்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைப்பதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவார்கள் என திர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு எவ்வித தடையும் இருக்க கூடாது எனவும் அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

From around the web