"காமராஜர் வழியில் வளமான தமிழகத்தை உருவாக்குவோம்" - காமராஜர் சிலைக்கு மலர் தூவி முதலமைச்சர் விஜய் மரியாதை!
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்லத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்குத் தமிழக முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் புடைசூழ மலர் தூவி நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பெருந்தலைவரின் தியாக வாழ்வையும் சாதனைகளையும் போற்றும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவான வாழ்த்துப் பதிவு ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் காமராஜரின் திட்டங்களை நன்றியோடு நினைவுகூர்ந்துள்ளார். "தமிழகத்தின் கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்."

மேலும், காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பாராட்டி முதலமைச்சர் குறிப்பிடுகையில், தமிழகத்தில் கல்விச்சாலைகள் மட்டுமின்றி, எண்ணற்ற நீர்த்தேக்கங்களையும், முக்கியத் பொதுத்துறைத் தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர் காமராஜர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜரின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க இந்த நன்னாளில் உறுதியேற்போம்.

"கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக" என்று முதலமைச்சர் விஜய் உணர்வுபூர்வமாகத் தனது பதிவை நிறைவு செய்துள்ளார். அமைச்சர்களுடன் நேரில் சென்று முதலமைச்சர் காமராஜரின் படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
