"கேரள மக்களின் ஆசியுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம்" - பிரதமர் மோடி நெகிழ்ச்சி பேச்சு!

 
மோடி ரோடு ஷோ மோடி ரோடு ஷோ

கேரள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் பிரதமர் மோடி இன்று பாலக்காடு வருகை தந்தார். அங்குத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், கேரள அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழப்போவதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி தனது உரையில், "கேரளம் இப்போது ஒரு மாற்றத்திற்கான செய்தியை அனுப்பி வருகிறது. இன்று நீங்கள் காட்டும் இந்த உற்சாகம், கேரள மக்களின் மனநிலை இப்போது ஒரு 'மக்கள் இயக்கமாகவே' மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது. கேரள மக்களின் ஆசியுடன் இந்த முறை பாஜக ஆட்சி அமைக்கும். பாஜக ஆட்சிக்கு வந்தால் கேரளாவை மிக விரைவிலேயே ஒரு 'வளர்ச்சியடைந்த கேரளா'வாக மாற்றிக் காட்டுவோம். இது மோடியின் உத்தரவாதம்."

பிரதமர் மோடி

கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்து வரும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளைப் பிரதமர் கடுமையாகச் சாடினார். "எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் ஆகிய இரு அணிகளும் தங்களுக்குள் ஒரு மறைமுகப் புரிதலை வைத்துக் கொண்டு, சில ஆண்டுகள் ஒருவர், அடுத்த சில ஆண்டுகள் மற்றொருவர் என மாறி மாறி கேரளாவைக் கொள்ளையடித்து வருகின்றனர்."

"ஒருபுறம் கம்யூனிஸ்டுகள், மறுபுறம் காங்கிரஸ்; ஒன்று ஊழல் நிறைந்தது என்றால், மற்றொன்று அதைவிடப் பெரும் ஊழல் நிறைந்தது. ஒன்று வகுப்புவாதச் சிந்தனை கொண்டது என்றால், மற்றொன்று அதைவிடத் தீவிரமானது. இவர்களுக்கு மக்களின் வளர்ச்சியில் எவ்வித அக்கறையும் இல்லை."

மோடி

கேரள தேர்தல் களத்தில் பாஜகவே இப்போது முன்னணி அணியாக (A-team) இருப்பதை இரு கூட்டணிகளுமே ஒப்புக்கொண்டுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், வாக்கு வங்கி அரசியலைத் தாண்டி மக்களின் விருப்பங்களை பாஜகவின் என்.டி.எ (NDA) கூட்டணி மட்டுமே நிறைவேற்றும் என உறுதி அளித்தார்.