“நார்வேயை மறக்க மாட்டோம்!” - நோபல் பரிசு கிடைக்காததால் நார்வே மீது கடும் கோபத்தில் டிரம்ப்!

 
நார்வே ட்ரம்ப் நோபல் பரிசு

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது அவமானகரமானது என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், நார்வே நாடு மீதான தனது அதிருப்தியையும் கடும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தனக்கு வழங்கப்பட வேண்டிய அமைதிக்கான நோபல் பரிசு, தகுதியற்ற மற்றும் யாருமே அறியாத நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ள டிரம்ப், இது தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் எனத் தெரிவித்தார்.

நோபல்

தீவிர சித்தாந்தவாதிகளின் தலையீட்டால் அமைதிக்கான நோபல் பரிசு தனது ஒட்டுமொத்த நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டதாகக் கூறிய அவர், நார்வே நாட்டை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஆசிய நாடுகளில் போர்கள் மூளாமல் தானே தடுத்து நிறுத்தியதாக எந்தவித ஆதாரமுமின்றி டிரம்ப் உரிமை கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.