“பதவி விலகும் வரை ஓய மாட்டோம்... ” அக்.10ல் டெல்லியில் மீண்டும் போராட்டம் - கரப்பான்பூச்சி கட்சி அறிவிப்பு!

 
கரப்பான்பூச்சி

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் அக்டோபர் 10-ம் தேதி சி.ஜே.பி. கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படவுள்ளது.

டெல்லி நீட் கரப்பான்பூச்சி

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இப்போராட்டத்திற்கான அனுமதி கடிதத்தை வழங்குவதற்காக டெல்லி காவல்துறையினரைச் சந்தித்துப் பேசிய அக்கட்சியின் நிர்வாகி சௌரவ் தாஸ், தங்களது அமைப்பினர் தொடர்ந்து அறவழியில் மட்டுமே போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

தேர்வில் முறைகேடு டெல்லி ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம் தடியடி

இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டங்களின் போது பெண்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள சி.ஜே.பி. நிர்வாகிகள், ஜனநாயக வழியிலான இப்போராட்டத்தில் இளைஞர்கள் பெருமளவில் திரளுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.