"திரள்நிதியில் ஒரு தேநீர்கூட அருந்தமாட்டோம்" - சீமான் பேச்சு!

 
இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிதி மற்றும் தனது பென்ஸ் கார் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசியுள்ளார். மக்களிடம் பெறப்படும் திரள்நிதியில் இருந்து கட்சியின் தேவைகளுக்காக அன்றி, ஒரு தேநீர்கூட அருந்த மாட்டோம் எனச் சீமான் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

நாம்தமிழர் கட்சி மக்களிடம் இருந்தே வாக்குகளையும், போராட்டத்திற்கான வலிமையையும் பெறுகிறது என்றும், மக்களின் ஆதரவோடு இயங்கும் ஒரு மக்கள் இயக்கமாகத் தங்கள் கட்சி முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீதான பென்ஸ் கார் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அந்தக் காரை நாம்தமிழர் கட்சியின் நிதியிலிருந்து வாங்கவில்லை என்றும், தனது மருமகனால் அது தனக்கு வாங்கித் தரப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.