இந்த 2 ராசிக்காரர்களுக்கு சொத்துக்களைக் குவிக்கும் யோகம்.. வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கோங்க!

 
இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்!! இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்!!

இன்று காரடையான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் விசேஷ நாளாகும். சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் பெருக அம்மனை வேண்டி நோன்பு கயிறு மாற்றிக் கொள்வதற்கு இன்று மிகச் சிறந்த நாள். இன்று சித்தயோகம் மற்றும் உத்திராடம் நட்சத்திரம் கூடி வருவதால், பல ராசிகளுக்கு இது மாற்றங்களை உருவாக்கும் நாளாக அமையப்போகிறது.

இன்றைய நல்ல நேரம்: காலை 10:45 முதல் 11:45 வரை.

இராகு காலம்: காலை 9:00 முதல் 10:30 வரை.

எமகண்டம்: பகல் 1:30 முதல் 3:00 வரை.

மேஷம்:

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாகத் தொடங்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் இன்று ஒரு முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளுக்குப் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்:
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் நிலவுவதால், மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தள்ளிப்போடுவது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கும் இன்று சந்திராஷ்டமத்தின் தாக்கம் இருப்பதால், பயணங்களின் போது கவனமாக இருப்பது அவசியம். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கவும். அமைதியாக இருப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

ராசி

கடகம்:
இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுகள் கைகூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்மம்:
உங்களது தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழி பிறக்கும். அரசாங்க ரீதியான காரியங்கள் தடையின்றி முடியும்.

கன்னி:
இன்று உங்களுக்குப் பொறுமை தேவைப்படும் நாள். வேலையில் கூடுதல் சுமை இருக்கலாம், ஆனால் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும்.

துலாம்:
திட்டமிட்ட காரியங்களில் சிறு தடைகள் வந்து நீங்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையலாம், சரியான உணவு முறையைப் பின்பற்றுங்கள்.

லட்சுமி நாராயண யோகம் ராசி ராசிபலன் அதிர்ஷ்டம் ஜோதிடம் யோகம்

விருச்சிகம்:
இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது இடமாற்றம் குறித்த சாதகமான சூழல் நிலவும்.

தனுசு:
பூர்வீக சொத்து விவகாரங்களில் இன்று நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் உங்களது ஆலோசனையைத் தேடி வருவார்கள். சுபச் செய்திகளால் வீடு களைகட்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

மகரம்:
ராசிநாதன் வலுவாக இருப்பதால் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலையில் உங்களது மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

கும்பம்:
பொருளாதார ரீதியாக ஏற்றமான நாள். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் உங்களது தனித்திறமை வெளிப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம்:
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் கூடும்.