சென்னை மக்களே உஷார்... நாளை முதல் 5 நாட்களுக்கு கனமழை... வெதர்மேன் அலெர்ட்!
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் இலங்கைக்கு கீழே இருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் டிசம்பர் 30ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மையம் வடக்கு நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று முதல் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
KTCC (chennai) the rains will start in another 1-2 hours and for next 4-5 days looks good. Big day ahead for Delta (Nagai, Mayil, Karai, Tanjore and parts of Ramanathapuram). Cuddalore and Pondy too will get heavy rains.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 26, 2024
================
The Depression was located well below Sri… pic.twitter.com/We8rUvNFGM
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று தொடங்கி அடுத்த 4-5 நாட்களுக்கு நன்றாக மழைப் பொழிவு இருக்கும். காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கைக்குக் கீழே இருக்கிறது இப்போது அது வடக்கு நோக்கிய நகரத் தொடங்கியுள்ளது, அது மெதுவாக நகர்வதால் 4-5 நாட்களுக்கு டிசம்பர் 1 வரை கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை நாளை முதல் மழை சூடு பிடிக்கத் தொடங்கலாம். தற்போது உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்குக் கீழே கரையைக் கடப்பதாக தெரிகிறது, எனவே இன்று முதல் டிசம்பர் 1 வரையில் மழைக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்”, என பிரதீப்ஜான் பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!