மலையை நம்மால் மீண்டும் உருவாக்கவே முடியாது... வெதர்மேன் எச்சரிக்கை!

 
வெதர்மேன்

 தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி   கேரளாவை போல  இயற்கை எழில் கொஞ்சும் சூழல் நிலவி வருகிறது. இங்குள்ள  பத்துகாணி  கிளாமலை பகுதியில் மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதி திடீரென வெடித்து சிதறியது.இதனால் அங்கிருந்த பாறைகள் வெடித்து சிதறி  அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்த புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தின.  


 

இதையடுத்து மலைப்பகுதியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை  வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ஒவ்வொரு மலையும் மழை பெய்ய ஆதாரமானவை. இவதான் காற்றை உயர்த்தி தருகின்றன ஆனால் குவாரிகளுக்காக தொடர்ந்து மலைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதனால்  மழைப் பொழிவு குறையலாம்.  

பத்துகாணி மலை
இந்த பூமியில் நாம் எதை வேண்டுமானாலும்  மீண்டும் உருவாக்கலாம்.  ஆனால் ஒரு மலையை நம்மால் மீண்டும் உருவாக்க முடியாது. ஒரு முறை இழந்தால், அது என்றென்றும் இழந்ததுதான் எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேனின் இந்த பதிவு பெரும் பேசுபொருளானதுடன் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி திங்கட்கிழமை இந்திய புவி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே மலை வெடிப்புக்கான காரணம் குறித்த உண்மைகள் தெரியவரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web