நட்சத்திர குடும்பத்தில் திருமணக் கொண்டாட்டம்... வைரலாகும் இன்ஸ்டா!

 
தியா

 
தமிழ் திரையுலகில் நட்சத்திர குடும்பமான நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் அடுத்த சுபநிகழ்வால் வீடே களைகட்ட தொடங்கியுள்ளது.  அதன்படி நடிகர் விஜயகுமாரின்  முதல் மனைவியான முத்துகண்ணுவிற்கு  கவிதா மற்றும்  அனிதா  என இரு மகள்கள்.இவர்கள் இருவருமே மருத்துவர்கள்.  இவர்களின் சகோதரர்  அருண்விஜய் . இதில்  கவிதா ஒரு சில படங்களில் முன்பு நடித்திருந்தாலும், அனிதா சினிமாபக்கம் தலைவைத்து படுக்கவில்லை.

முழுக்க முழுக்க  மருத்துவத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.  50 வயதாகும் அனிதா  இன்னும் இளமை மாறாமல் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வருவதுண்டு.  இவர் தன்னுடன் படித்த கோகுல் என்பவரைத் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  தியா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் தியா  வெளிநாட்டில் மருத்துவம் படித்து வரும் நிலையில்  இவருக்குதான் இப்போது திருமணம் நடக்க உள்ளது. தியா ,  திலனை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.  இவர்களின்  நிச்சயதார்த்தம் விமரிசையாக நடத்தப்பட்ட நிலையில்  பிப்ரவரி 19ம் தேதி இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது.

தியா

இதற்காக நடிகர் விஜயகுமார் மகள்கள் அனிதா, கவிதா, மருமகள் ஆர்த்தி, பேரனுடன் நடிகர்கள் ரஜினி, சூர்யா, தனுஷ் என கோலிவுட் பிரபலங்கள் பலருக்கு   நேரில் து அழைப்பு விடுத்துள்ளார்.  ஓரிரு தினங்களே திருமணத்திற்கு உள்ள நிலையில்  வெளிநாட்டில் இருந்து தியா சென்னை வந்துள்ளார். விமான நிலையத்திற்கு ஒட்டு மொத்தமாக சென்று குடும்பத்தினர் அனைவரும்  உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.  வீட்டிலும் தியாவுக்கு ஆரத்தி எடுத்து கட்டித்தழுவி  உற்சாகத்துடன் வளைய வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web