வார இறுதி நாட்கள்... தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 
பேருந்து யுபிஐ பேருந்து யுபிஐ

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் தங்கு தடையின்றிப் பயணம் செய்வதற்காகத் தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையிலிருந்தும், மாநிலத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்தும் இயக்கப்படவுள்ளன. 

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பயணிகள் எளிதாகப் பயணிக்கவும், அவர்கள் செல்லும் வழித்தடங்களுக்கு ஏற்பப் பின்வரும் மூன்று முக்கியப் பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் புறப்படும்.

இங்கிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சிறப்பு பேருந்து

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து  வேலூர், ஓசூர், பெங்களூரு மற்றும் புதுச்சேரி ஆகிய வழித்தடங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரம் முனையத்தில் இருந்து ஆந்திர மாநில வழித்தடங்கள் மற்றும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை மட்டுமின்றி, வார இறுதி நாட்களில் அதிகப் பயணிகள் பயணிக்கும் முக்கிய நகரங்களான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் சேலம் ஆகிய இடங்களிலிருந்தும் பிற மாவட்டங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப் போக்குவரத்து கழகக் கோட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கலை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் தகவல்

வார இறுதி நாட்களில் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, தங்களது பயணத்தை நிம்மதியாக அமைத்துக் கொள்ளப் பயணிகள் முன்கூட்டியே தங்களது இருக்கைகளைத் திட்டமிட்டு முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பயணிகள் அரசுப் போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in அல்லது அதன் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தித் தங்களது பயண சீட்டுகளை மிக எளிதாக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். பொதுமக்களின் தேவைக்கேற்ப, தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும், பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு வழிகாட்டச் சிறப்புப் பணியாளர்களை நியமிக்கவும் போக்குவரத்துத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.