திமுக ஆட்சியில் தூங்கிக் கொண்டிருந்தார்களா? - அமைச்சர் ரமேஷ் ஆவேசம்!

 
ரமேஷ்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் தவெக அரசு உடனடியாக 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், "கடந்த திமுக ஆட்சியில் அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தார்களா?" என அமைச்சர் ரமேஷ் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 60 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பட்டா மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசு தாமதிக்காமல் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து முன்னாள் தாசில்தார் உட்பட முக்கிய நபர்களைக் கைது செய்துள்ளது.

அமைச்சர் ரமேஷ்

பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரத்திலும் தங்களது அரசு துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்ததை அமைச்சர் ரமேஷ் சுட்டிக்காட்டினார். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த நில ஆக்கிரமிப்பு மற்றும் முறைகேடுகளைக் கடந்த திமுக ஆட்சியில் கண்டுபிடிக்காமல் விட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், ஆன்மீகச் சொத்துகளையும் கோயில் நிலங்களையும் பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.