மேற்குக் கரையில் துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி; 2 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை
Oct 24, 2026, 19:15 IST
மேற்குக் கரையில் ஹெப்ரான் நகருக்கு அருகே வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 3 வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 2 பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 20 நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தைத் தொடர்ந்து ஹெப்ரான் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேற்குக் கரை முழுவதும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் ஏற்கெனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
