மேற்கு வங்க முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கம்!
மேற்கு வங்காள முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பயணித்த ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாகக் கால்பந்து மைதானம் ஒன்றில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மதினிப்பூர் மாவட்டம் கேஷ்பூரில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் சுதிராம் போஸின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக, முதல்வர் சுவேந்து அதிகாரி தும்தும் பகுதியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். நடுவானில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது, திடீரெனப் பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை ஏற்பட்டது.
ஆபத்தை உணர்ந்த விமானி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொல்ஹட் பகுதியில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் ஹெலிகாப்டரை அவசரமாகத் தரையிறக்கினார்.
இந்தச் சம்பவத்தில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பாகத் தப்பினர். அதனைத் தொடர்ந்து, கேஷ்பூரில் நடைபெறவிருந்த நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் சுவேந்து அதிகாரி காரில் புறப்பட்டுச் சென்றார்.
