என்னா ஃபைட்! கொள்ளையர்களை திணறடிக்க வைத்த தாய், மகள்.. பரபரப்பு வீடியோ வைரல்!

 
 அமிதா மெஹோத்

ஹைதராபாத்தை சேர்ந்தவர் அமிதா மெஹோத். 42 வயதான இவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச் 21) மதியம் 2 மணியளவில் இவரது வீட்டிற்கு 2 கொள்ளையர்கள் வந்து கதவைத் தட்டியுள்ளனர். அப்போது வேலைக்காரி கதவைத் திறந்துள்ளார். உள்ளே இருப்பவரிடம் பார்சலை கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு அவர், 'வெளியே காத்திருங்கள்' என்றார்.


உடனே அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து வேலைக்காரியின் கழுத்தில் வைத்து கொலை செய்வதாக மிரட்டியுள்ளான். மற்றொருவன் துப்பாக்கியை எடுத்துள்ளான். பின்னர் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டில் இருந்த அமிதா மெஹோத் மற்றும் அவரது மகளிடம் விலை உயர்ந்த பொருட்களை இங்கு கொடுக்குமாறு கூறினர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த இருவரும் கொள்ளையர்களை விரட்டினர்.

மேலும் கூச்சலிட்டபடி தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர், தப்பியோடிய கொள்ளையர்களை அக்கம் பக்கத்தினர் பிடித்தனர். அவர்கள் பிரேம் சந்த் மற்றும் சுஷில் என்பது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. வடக்கு காவல் துணை ஆணையர் ரோகிணி பிரியதர்ஷினி, பெண்களின் துணிச்சலைப் பாராட்டினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web