இருட்டில் வாழ்ந்தால் என்ன? ஐ.ஏ.எஸ் கனவை விடமாட்டேன்.. நம்பிக்கையளிக்கும் 12 வயது சிறுவன்!

 
முகமது ஆஷிக்

மனதைக் கவரும் வீடியோவை முகமது ஆஷிக் என்பவர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பெங்களூருவில் உள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் நாகராஜ் மற்றும் அவனது லட்சியங்களைக் கேட்கும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகிறோம். இந்த வீடியோவில் நாகராஜுடன் இயல்பாக உரையாடும் ஆஷிக், தனது கனவுகளையும் லட்சியங்களையும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

ஏழ்மையிலும், சவாலான சூழ்நிலையிலும் வளர்ந்தாலும், நேர்மறை சிந்தனை கொண்டவர் சிறுவன் நாகராஜ். அவர் தற்போது வாழும் சூழ்நிலையில் அவருக்கு பெரிய புகார்கள் எதுவும் இல்லை. இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்கிறார். உங்கள் கனவுகள் மற்றும் லட்சியங்கள் என்ன என்று ஆஷிக் கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் தீர்க்கமாக பதில் கொடுத்துள்ளார்.

சிறுவன் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் அதில் வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் பெரிய வீட்டில் வாழ முடியும் என்றும் உறுதியாக நம்புவதாகவும் கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web