விநாயகர் சதுர்த்தி வழிபாட்டால் கிட்டும் 21 பேறுகள் என்னென்ன?
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தின விழா, பொதுமக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நம் கஷ்டங்களையும், வினைகளையும் தீர்த்து வைப்பவர் விநாயகர். அதனால் தான் விநாயகரை வினை தீர்ப்பவர் என்கின்றோம்.
எந்த ஒரு புது வேலையை செய்யத் தொடங்கும் போதும், முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாக பிடித்து மூன்று முறை தலையிலேயே குட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக் கொள்ளும் போது, யோக சாஸ்திரங்களின்படி நம் தலையின் இருபக்கமும் இருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு சுரந்து நாடி வழியாக மூலதாரத்தில் ஒளி ரூபமாகவிருக்கும் விநாயகரை சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது, அவரின் அருள் கிடைக்கும் என்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.
விநாயகரின் சிறப்பினை உணர்த்த விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாக தாம் உணர்ந்த விநாயகர் புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிறகு கச்சியப்ப முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்பிரிவுகளை 250 பிரிவுகளுடைய உபாசனாகாண்டம், லீலா காண்டம் என இரண்டு காண்டங்களாக அமைத்து 12,800 சுலோகங்களாக விநாயகர் புராணம் பாடினார்.

விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப்பெருமான் எடுத்த 12 அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன. அந்த அவதாரங்களில் அவர் வக்கிர துண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மயூரேசர், பாலச்சந்திரர், தூமகேது, கணேசர்,கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.
பார்வதி தேவி மண்ணில் ஓர் உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்தில் சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாக நாம் கொண்டாடுகிறோம். மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தையும் அமைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கும் 21 விதமான பேறுகள் இவை:
தர்மம்
பொருள்
இன்பம்
செளபாக்கியம்
கல்வி
பெருந்தன்மை
நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்
முகலக்ஷணம்
வீரம்
வெற்றி

எல்லோரிடமும் அன்பு பெறுதல்
நல்ல சந்ததி
நல்ல குடும்பம்
நுண்ணறிவு
நற்புகழ்
சோகம் இல்லாமை
அசுபங்கள் அகலும்
வாக்கு சித்தி
சாந்தம்
பில்லி சூனியம் நீங்குதல்
அடக்கம்
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
